தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை; எதிர்க் கட்சித் தலைவரின் கேள்விக்கு சபாநாயகர் பதில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏன் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.