உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கேள்வி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட விதப்புரைகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சபாநாயகர் தவறிவிட்டார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவல்களும்இ தேர்தல் நடக்கும் கால அட்டவணை தொடர்பிலான விடயங்கள் கூட ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும்இ இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்பதுடன் முழுமையான தீர்ப்பு குறித்த நாளுக்கான ஹன்சாட் அதிகார அறிக்கையில் வெளியிடப்பட வேண்டும். ஆனால் இத்தீர்ப்பு இது வரை அறிவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் சில சட்டமூலங்களை ஆராய்ந்து பரிசீலித்த பின்னர்இ சம்பந்தப்பட்ட தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும்.
அதன் பின்னர்இ அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வின் முதலாம் நாளன்று சம்பந்தப்பட்ட அத்தீர்ப்பினைச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் கட்டாயம் அறிவிக்க வேண்டும்.

இந்த தீர்ப்பினை பாராளுமன்றத்தில் தெரிவிக்காமையினால் சபாநாயகராகிய உங்களினதும்இ பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பை ஏன் சபையில் அறிவிக்கவில்லை என்று கேட்கிறோம்? ஊடகங்களில் கூட வெளியாகும் தகவல்கள் ஏன் பாராளுமன்றத்தில் முன்னமே முன்வைக்கப்படுவதில்லை என்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒழுங்கு முறையில் காணப்படும் பிரச்சினை தொடர்பிலே நாம் இங்கு கேள்வி எழுப்புகிறோம். இந்த செயன்முறை சபாநாயகர் ஊடாக நிறைவுற வேண்டிய அறிவிப்புக்கு முன்னர் நாட்டிற்கு வெளியாகியமை தொடர்பிலயே இங்கு பிரச்சினை காணப்படுகின்றன. அது எவ்வாறு அறிவிக்கப்பட முடியும்? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *