யானை தாக்கி முதியவர் பலி
வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தோணி தாண்டமடு பிரதேசத்தில் யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பிரதேசத்தில் வயற்காவலில் இருந்த வேளை வயலுக்குள் புகுந்த யானை முதியவரை தாக்கியுள்ளதுடன் தாக்குதலுக்குள்ளான நபர் இஸ்தலத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
உயிர் இழந்த முதியவர் அதே பிரதேசத்தைச்சேர்ந்த கணபதி பிள்ளை மனோகரன் (வயது 66) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்புல் வாகரைப் பொலிஸாரும் கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலத்தை ஏற்றி வருவதற்கான வாகன வசதியினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)