மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவைப் பிரிவு ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு
மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவைப் பிரிவு ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு (4) ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம். முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பிரிகேட் கொமான்டர் கேர்னல் ஆர்.ஆர்.சி.கருணாரத்ன, கொமான்டர் நவரத்ன பண்டா, இராணுவ அதிகாரிகளான மதுரங்க, ராஜித்த வனசூரிய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)