வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வு
நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (4) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.சஹாப்தீன் அவர்களின் வழிகாட்டலில் பிரதி அதிபர் திருமதி ஜெஸீமா அய்யூப் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இதில், பாடசாலை ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.பி.பாயிஸ், ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)