உள்நாடு

முஸ்லிம் திணைக்கள ஏற்பாட்டில் வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வுகள்

இலங்கையின் 77 வது சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை (4) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத வழிபாடுகளும் பள்ளிவாசலில் முன்றலில் தேசியக் கொடியேற்று வைபவம் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ், (பா.உ),மற்றும் பிரதியமைச்சர் முனீர் முலாபர் (பா.உ) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் எம். நவாஸ், மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம், வெள்ளவத்தை பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர்கள் பிரதேச வாசிகள் உலமாக்கள்.ஏனைய பள்ளிவாசல்கள் தலைவர்கள் மதரஸா மாணவர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொழும்பு பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் நாட்டுக்காகவும் சுதந்திரம் ,சமாதான வாழ்க்கைக்காக துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *