கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 77 வது சுதந்திர தின நிகழ்வு
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலாளர் மிலங்க பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்த கற்பிட்டி பிரதேச செயலாளர் சுதந்திர தினம் தொடர்பான சிறப்புரையாற்றினார் அவருடன் கிராம சேவையாளர்களின் உயர் அதிகாரி பீ.எம். பைனஸ் கலந்து கொண்டார் .
மேலும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)