உள்நாடு

ஹஜ்ஜுக்குச் செல்வோர் இம் மாதம் 14 க்கு முன் பதிவு செய்ய முடியும்; ஹஜ் முகவர் சங்கத் தலைவர் கரீம்

முஸ்லிம் சமய தகவல் திணைக்களத்தில் இதுவரை 4500 ஹாஜிகள் மட்டுமே ஒன்லைன் ஊடாக இவ்வருடம் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு பதிந்துள்ளனர் அதில் 2200 பேர் மட்டுமே பதிவுக் கட்டணம் 5 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளனர் ஏனையவர்கள் பதிவுக்குரிய பணம் செலுத்தவில்லை. அவர்களுக்கு 03.02.2025ஆம் திகதி வரை பதிவுப் பணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.


ஹஜ்ஜூ பதிவுக்கு காத்திருப்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். இம்மாதம் 14ஆம் திகதியுடன் ஹஜ் பதிவு இறுதி திகதியாகும். ஆகவே ஹஜ் செல்ல உள்ளவர்கள் பதிவு செய்ய முடியும். என ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சி.பி.எம். கரீம் தெரிவித்தார்.

திங்கட் கிழமை 03.02.2025 ஹஜ்முகவர்கள் சங்கத்தின் தலைமையகமான மருதானையில் உள்ள கரீம் முகவர் நிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் கரீம் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

இம்முறை சவுதி அரசாங்கம் இலங்கையில் வாழும் முஸ்லிம் சனத்தொகை கேற்ப 1 வீதமாக 3500 பேருக்கு ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதற்காக முஸ்லிம் சமய திணைக்களம் 67 ஹஜ் முகவர்கள் தேர்ந்தெடுத்து பதிவு செய்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தி உள்ளது.


ஹஜ் செல்ல உள்ளவர்கள் உங்கள் பதிவுகள் கடவுச்சீட்டுக்களை முன்கூட்டியே ஹஜ் முகவர்களிடம் சமர்ப்பிக்கும் இடம் அவர்களுக்கு முன் கூட்டியே சவுதி தங்குமிடம் ஹோட்டல் பிரயாணச் சீட்டுக்களை ஒதுங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.


இம்முறை ஹாஜிகளுக்கு மினா அரபா ஏ அல்லது பி. பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரயாணம் செய்யும் பஸ்கள் என்பனவும் முன்கூட்டியே ஒதுங்கிக் கொள்ள முடியும் ஆகவே இன்றிலிருந்தே ஹாஜிகள் தமது தஸ்தாவேஜ்களை பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மாத்திரம் வழங்கல் வேண்டும். ஹஜ் முகவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளன. ஒர் முகவருக்கு 45 -20 ஹாஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதலாவது ஹாஜிகள் மே மாதம் 16 ஆம் திகதி செல்ல உள்ளார்கள். ஒர் ஹாஜிக்கு அன்னளவாக 2.2 மில்லியன் ரூபா செலவாகும்.
ஹஜ் முகவர் செயலாளர் சப்ராஸ் சமுன் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *