கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கொண்டாடப்பட்ட 77ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரைக்கார்கேட்போர் கூடத்தில் இன்று (4) இடம்பெற்றது.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் U.M. அமீர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பாடசாலையின் அதிபரினால் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர் சாஜினாஸினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டதோடு, அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன் முலம் சிறப்பு பேச்சும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பெருந்திரளானவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டியிலிருந்து ஹஸ்லான் ரஸாக்)