உள்நாடு

கண்டி மீராம் மக்காம் பள்ளியில் இடம்பெற்ற 77ஆவது சுதந்திர தின வைபவம்

கண்டி மீராம் மக்காம் பள்ளி வாசல், கண்டி நகர் பள்ளி வாசல்கள் சம்மேளனம், கண்டி நகர் ஜம்மிய்யது உலமா சபை ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய இலங்கையின் 77வது சுதந்திர தின வைபவம் பள்ளியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் சரன்னியா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தேசிய கொடியை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக, ரியாஸ் பாரூக் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள்.
மௌலவி அஸ்லம் சிங்களத்தில் தேசிய சுதந்திர தினத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்புக் குறித்து உரையாற்றினார்.

இதில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி. கண்டி மாநகர ஆணையாளர், இந்திகா குமாரி அபேசிங்க, முன்னாள் மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர்களுடன் கண்டி மிராம் மக்கம் பள்ளிவாசல் தலைவர் இலாஹி ஆப்தீன். கண்டி நகர் பள்ளிவசால்கள் சம்மேளனத்தின் தலைவர். கே. ஆர் ஏ. சித்தீக் கண்டி சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி பாயிஸ் தமிழ் சிங்கள. வர்த்தகத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரம்மிய லங்கா அமைப்பின் பணிப்பாளர் உறுப்பினர் ஏ. ஆர். எம். உவைஸ் அவர்களினால் கண்டி மாநகர சபையின் ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க அவர்களிடம் 50 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *