ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு
ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஏற்பாடு செய்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது சுதந்திரதின நிகழ்வு “தேசிய மறுமலர்ச்சியில் அனைவரும் அணிதிரள்வோம் “எனும் தொனிப் பொருளில் ஒலுவில் ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் சிரேஷ்ட பொறியாளர் A.M. றாபி தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதிகளாக ஒலுவில் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினட் கொமாண்டர் LPSM.பத்திரன , ஒலுவில் வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி AL.அலாவுதீன்,ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.சுதந்திர தின உரை உபதலைவரும ஓய்வு நிலை அதிபருமான M.நசீர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வின் போது ஒலுவில் ஜும்மா பள்ளிவாசலில் இயங்கும் தாருத் தலபா அல்குர்ஆன் மனன கலாபீட மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். பிறை FM அறிவிப்பாளர் கலைப் பிறை J.வஹாப்தீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் ஊடக அனுசரணையை ஒலுவில் மீடியா வழங்கியது.
(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில் விசேட செய்தியாளர்)