உள்நாடு

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் தேசிய மக்கள் சக்தியின் சுதந்திர தின நிகழ்வு

77ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி ஊர்வலத்துடன் (04) அநுராதபுரம் சல்காது மைதானத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேணா நாணயக்கார மற்றும் பி.டி.எம்.பலிஹேன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

வடமத்திய மாகாண சபை , அனுராதபுரம் மாவட்ட செயலகம் , அனுராதபுரம் பொலிசார்,மாநகரசபை என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

ஆரோக்கியமான ஆற்றல் மிக்க குடிமக்களை உருவாக்குவதன் மூலம் உடல் தகுதி மற்றும் விளையாட்டுக்களின் மறுமலர்ச்சி மூலம் பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை அடைய முடியும் என்பதை சமூகமாக்கும் நோக்கில் இந்த மறுமலர்ச்சி நடைபயணம் நடைபெற்றது.

இதன் போது மாகாண பிரதான செயலாளர் ரஞ்சித் பிரேமநாத். ஜயசிங்க மாகாண அமைச்சின் சேயலாளர்கள் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய நிறுவனங்களின் தலைவர்கள் திணைக்களத்  தலைவர்கள் அரச மற்றும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *