பு/ வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு
கடந்த திங்கள்கிழமை (31)புத்தளம் வட்டக் கண்டல் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் 2024 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களையும் கௌரவிக்கும் முகமாக பரிசளிக்கும் வைப்பவம் இடம்பெற்றது.
70 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற புத்தளம் வலையக் கல்வி பணிமனையின் பாட இணைப்பாளர் திருவாளர் வி. அருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ் வைபவம் கல்லூரியின் அதிபர் ஏ.ஆர். எம் ரம்சின் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ் வின் போது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த. 4 பேரின் பெயர் மற்றும் புள்ளிகள் விவரம் பின்வருமாறு.
1) மொகமட் சன்ஹிர் அனாசிரின் 151
2) மொகமது சியாம் மொகமட் சாஜித் 143
3) மொகமது நசீல் பாத்திமா ஹம்தா 141
4) ஜிப்ரி பாத்திமா சம்றா 138
(ஏ.என்.எம். முஸ்பிக் – புத்தளம்)