நாச்சியாதீவு மு.ம.வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா
2025ம் கல்வி ஆண்டிற்காக முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்து கொள்ளும் வித்தியாரம்ப விழா கடந்த 2025.01.30 வியாழக்கிழமை பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அநுராதபுர வலயக்கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகரும் இரண்டாம் மொழி வளவாளருமான ஜனாப் அஹமட் ராபி அவர்கள் கலந்து கொண்டார்.
தரம் 2 மாணவர்கள் மலர்கொத்து வழங்கி புதிய மாணவர்களை வரவேற்றதுடன் கலைநிகழ்ச்சிகள் மூலமும் புதிய மாணவர்களை மகிழ்வித்தனர்.
தரம் 1 புதிய மாணவர்களுக்கான முதலாவது பாடத்தினை அல்-ஹிகம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் உவைசுல் கர்னி (முப்தி) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(ரியாஸ் அஹமட்)