பாணந்துறை இல்மாவில் முதலாம் தர மாணவர் சேர்ப்பு நிகழ்வு
பாணந்துறை இல்மா வித்யாலயத்தில் முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் கால்கோள் நிகழ்வு அண்மையில் மிக விமரிசையாக வித்யாலய வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
வித்யாலய அதிபர் ரஸ்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , ஓமான் நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனமான “அல் -ஒபைதான்” எபரலின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸிர் லஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.