தென் மாகாண ஊடகவியலாளர்களுக்கு முஸ்லிம் மீடியா நடாத்திய செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் தென் மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்,ஊடக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஊடக விழிப்புணர்வு கலந்துரையாடல் வெளிகம அரபா தேசிய கல்லுரி மண்டபத்தில் இன்றைய தினம் இடம் பெற்றது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ்.என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வரவேற்புரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.சாதிக் சிஹான் நிகழ்த்தினார்.
அரபா தேசிய கல்லாரியின் அதிபர் எம்.டி.எம்.முத்ஹர் முன்னிலையில் இடம் பெற்ற இந்த செயலமர்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர் எம்.எஸ்.எம்.பாஹிம் ஒழுங்குபடுத்தியிருந்ததுடன்,மாவட்ட இணைப்பாளர் முஹம்மத் பர்ஹானும் தமது மழுமையான பங்களிப்பினை செய்திருந்தார்.
நிகழ்ச்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும்,சிரேஷ்டஒலி,ஓளிபரப்பாளருமான அல்-ஹாஜ்.இர்சாத் ஏ.காதர் நெறிப்படுத்தினார்.
அதே வேளை பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வும் இதன் போது நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.