கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன்னூரில் கூட்டு ஸகாத் சொற்பொழிவு
“சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்தின் பங்கு” என்ற தலைப்பில் விஷேட சொற்பொழிவு நிகழ்வொன்று கஹட்டோவிட்டவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஸம்ஸம் பவுண்டேசன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா “சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்தின் பங்கு”என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
கஹட்டோவிட்ட,ஓகொடபொல ஸகாத் நிதியமும் , கஹட்டோவிட்ட, ஓகொடபொல,உடுகொட ஜெம்மியதுல் உலமா கிளைகளும் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.