உள்நாடு

ஏட்டுலா கனவாக்க அமைப்பின் மூன்றாம் முத்து நூல் “இப்படிக்கு என் இதயம்” வெளியீடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவியும், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளருமான கிருங்கதெனியவைச் சேர்ந்த பாத்திமா சில்மியா எழுதிய “இப்படிக்கு என் இதயம்” கன்னிக் கவிதை நூல் வெளியீட்டு விழா 2025 பெப்ரவரி 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு மாவனல்லை மயுரபாத தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.

இலைமறை காய்களாய் இருக்கும் சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் “ஏட்டுலா கனவாக்கம்” அமைப்பின் மூன்றாவது முத்து நூலாக இது வெளியீடு செய்யப்பட்டது.

பிரதம அதிதியாக
ஓய்வுபெற்ற அதிபரும், MESDA Publication பணிப்பாளருமான அல்ஹாஜ் M.J.M. நயீமுத்தீன், சிறப்பு விருந்தினராக தமிழ்நெஞ்சம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அமின் முஹம்மத்
(- தமிழ்நெஞ்சம் – France) கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி விழாவில் பலதரப்பட்ட ஆளுமைகள், கல்விமான்கள், உலமாக்கள், எழுத்தாளர்கள், ஊர் மக்கள் உற்பட நூலாசிரியரின் குடும்பத்தினர்கள் என பெருந்திறலானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *