உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தள கிளையின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கான கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கான கருத்தரங்கு கடந்த 01.02.2025 சனிக்கிழமை புத்தளம் பெரிய பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் நகரக்கிளைக்குட்பட்ட ஆண்கள் மத்ரஸாக்களின் இரண்டு மேல் வகுப்பு மாணவர்களும் இரண்டு உஸ்தாத் மார்களும் மற்றும் புத்தளத்தில் உள்ள உலமாக்களும் கலந்து கொண்டனர்.

மூன்று பிரிவுகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

வளவாளர்களாக அஷ்ஷேக் அப்துந் நாசர் ரஹ்மானி, அஷ்ஷேக் ஸவ்கி பஹ்ஜி, அஷ்ஷேக் ஸமீல் பஹ்ஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபவர்களுக்கு அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் ஊடாக சான்றிதழ்களும் பகல் போசணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்ரஸா விவகார உபக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *