சீனன்கோட்டை ஷாதுலிய்யா கலா பீடத்தில் சுதந்திர தின நிகழ்வு..!
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி மு.ப 8:00 மணிக்கு கலாபீட முற்றவெளியில் நடை பெறும்.
கலாபீட தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.ஸி.எம் ஹம்ஸா, பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அதிபர் மெளலவி அல்-உஸ்தாத் எம் அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நிகழ்வு இடம்பெறும்.
தேசிய கொடி ஏற்றப்பட்ட பின் மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்படும். பின்னர் நாட்டின் சாந்தி, சமாதானம், சுபீட்சத்திற்காக துஆப் பிரார்த்தனையும் இடம் பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து கலாபீட வளவில் மரம் நடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணைப் பொருளாளர் அல்-ஹாஜ் முஸ்னி உவைஸ் தெரிவித்தார்.
நிகழ்வில் பள்ளிச் சங்க உறுப்பினர்கள், கலாபீட நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றுவர்.
