பாத்திமா சில்மியாவின் “இப்படிக்கு என் இதயம்” நூல் வெளியீட்டு விழா
பாத்திமா சில்மியா எழுதிய’இப்படித்தான் என் இதயம்’கவிதை நூல் வெளியீட்டு விழா பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மயுரபாத தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஏட்டுலா கனவாக்கம் என்ற அமைப்பின் மூன்றாவது வெளியீடான இந்த நூல் வெளியீட்டு விழா இதன் பணிப்பாளர் ஆஷிக் ஹுஸைன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நூல் நயவுரையை கவிஞரும் ஆசிரியையுமான எம்.எஸ் .நதீரா வசூக் நிகழ்த்தவுள்ளார்.ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜே.எம்.நயீமுத்தீன் பிரதம அதிதியாகவும், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்துள்ள தமிழ் நெஞ்சம் பிரதம ஆசிரியர் அமீன் முஹம்மத் சிறப்பு அதிதியாகவும் பங்கேற்கவுள்ள இந்த நிகழ்வினை ஆர்.ஜே.மீடியா பணிப்பாளர் இன்ஷாப் முஹம்மத் தொகுத்து வழங்கவுள்ளார்.