ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் டிபெண்டர் வாகனம் விபத்து; நான்கு பொலிஸார் காயம்
தலாவ ஏ 28 வீதியில் 70 வது மைல்கள் பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த டிஃபென்டர் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (01) அதிகாலை குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்போது டிஃபென்டர் வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்துள்ளனர்.
அங்கு அவர்கள் 4 பேரும் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)