ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி இன்று முதல் அமுலுக்கு வருகிறது
இன்று (01) முதல் கார்கள், மின்சார கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, மூன்றாம் கட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (31) விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாக்கத்திற்கோ அல்லது அதன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று கட்டங்களின் கீழ் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.