உள்நாடு

112 சுகாதாரப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய நூற்றி பன்னிரண்டு 112 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாவட்ட சுகாதார பணிப்பாளர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சுமார் 10 வருடங்கள் சுகாதார ஊழியர்களாக பணியாற்றிய ஐம்பத்தி ரண்டு பேர் பிரதி பதவிக்கும் அறுபது பேர் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மூன்று மாத உதவியாளர்கள் பயிற்சியின் பின்னர் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தொடர்புடைய சேவைக்காலத்தை நிறைவு செய்தவர்களுக்காக பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவார்கள்.

இதன் போது வடமத்திய மாகாண பிரதான செயலாளர் வருண சமரதிவாகார சுகாதார அமைச்சின் செயலாளர்  சிறிமேவன் தர்மசேன ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க சுகாதார சேவை பணிப்பாளர் நெலும் சமறு திலக உள்ளிட்ட சுகாதார சேவை குழுமத்தின் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *