போலியான குற்றச்சாட்டு. விசாரணை நடாத்தவும்.சி.ஐ.டி யினரிடம் மேல் மாகாண ஆளுநர் கோரிக்கை.
இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தன்னை குறிவைத்து பல முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சில சமூக ஊடக ஆர்வலர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சில அரசியல்வாதிகள் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் சமூக ஊடகங்களிலும் எந்த அடிப்படையும் இல்லாமல், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்த தகவல்களை ஆளுநர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அவர் ஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை தாம் கடுமையாக மறுப்பதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தனக்கு நீதி கிடைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.