பிறை தென்பட்டதால் ஷஃபான் மாதம் ஆரம்பம்.
ஹிஜ்ரி 1446 ; ஸஹ்பான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜனவரி 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன் போது நாட்டின் பல பகுதிகளிலும் தலைப் பிறை தென்பட்டதால் இலங்கை வாழ் மக்கள் புனித ஜனவரி 30 ஆம் திகதியான இன்று மஹ்ரிபு தொழுகையுடன் புனித ஸஹ்பான் மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் தலைவர் மெளலவி ஹிஷாம் (பத்தாஹி) உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி உள்ளிட்ட பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி மொகமட் சாலிஹீன், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)