பதுளை அன்வர் பள்ளிவாசல் தலைவராக இம்தியாஸ் பக்கீர்டீன் மீண்டும் தெரிவு
பதுளை நகர் “மஸ்ஜிதுல் அன்வர்” பெரிய ஜும்மா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆத் தொழுகையின் பின்பு ஊவா மாகாண (பதுளை/ மொனராகலை மாவட்ட) மாவட்ட முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் யூ . எல்.எம் ரிஃபாஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதன் போது இம்தியாஸ் பக்கீர்டீன் தலைமையிலான குழுவினர் புதிய நிர்வாகிகளாகத் தெரிவாகியுள்ளனர்.
பின்வருவோர் புதிய நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் – இம்தியாஸ் பக்கீர்டீன்
உப தலைவர்- எம் .கே பிஷ்ருல் ஹக்
செயலாளர் – ஏ.ஆர் .எம் பைசர் (ஆசிரியர்)
பொருளாளர் -காதர் கையூம் (பிரதியதிபர்)
மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களாக ஏ. எல். எம் ஜெமீல் ,எம். ஹுசைர் , எஸ்.எச் .ஏ ரஸ்ஸாக் ,எம். இக்ராஸ் ,இம்ரான் மக்கீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
(அப்துல் வாஹிட் ஏ. குத்தூஸ்)