ஊவா பரணகம- ரத்தம்ப “தாருத் தக்வா” அஹதிய் யாவின் / மீள் ஆரம்ப நிகழ்வும் ,பரிசளிப்பு விழாவும் !
பதுளை மாவட்ட ஊவா பரணகம, ரத்தம்ப “தாருத் தக்வா “அஹதிய்யா பாடசாலையின் மீள் ஆரம்ப நிகழ்வும், ரத்தம்ப சலாஹிய் யா குர்ஆன் மத்ரஸா மற்றும் பகுதிநேர குர்ஆன் மனனப் பிரிவுக்கான பரிசளிப்பு விழாவும், ரத்தம்ப திருமண மண்டப பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பதுளை மாவட்ட உலமா சபைக் கிளை மற்றும் மாவட்ட அஹதிய்யா சம்மேளத்தின் தலைவரும், முன்னாள் பதுளை பஹ்மிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ் ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மஹ்மூத் (பஹ்மி ) தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட விழாவினை ரத்தம்ப பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையும் ஜனாஸா நலன்புரி சங்கமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய அஹதிய்யா சம்மேளத்தின் தலைவர் எம். ஆர் .எம் சரூக் கௌரவ அதிதிகளாக ரத்தம்ப ஜும்மா பள்ளித்தலைவர் எஸ்.எச் கௌஸ் மீரான், ரத்தம்ப முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம். எப். எம் திருமதி ஜெஸ்மின் மற்றும் விசேட அதிதிகளாக மாவட்ட அஹதிய்யா சம்மேளத்தின் உப தலைவர் எம். எச் . எம் நலீம் உள்ளிட்ட பிரதேச உலமாக்கள், கல்வியலாளர்கள், சமய ,சமூக அரசியல், வர்த்தக பிரமுகர்கள் அமைப்புகளின் பிரதானிகள் என பலர் கலந்து கொண்டிருந்தன.
இந்நிகழ்வின் விசேட பேச்சாளராக தேசிய
அஹதிய்யா சம்மேளத்தின் பொருளாளர் அஷ் -ஷெய்க் அக்ரம் ஜுனைதீன் கலந்து கொண்டிருந்தார் .
மாணவ மணிகளின் பல்சுவை நிகழ்வுகளும் அரங்கேறின. இதன் போது ரத்தம்ப ஜும்மா பள்ளி பிரதம இமாமும் , முஅல்லிமுமான அஷ் ஷெய் ய்க் முஹம்மத் சுஹைல் (அல் ஹுமைதி) பரிசுகள் , கேடயம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
(அப்துல் வாஹிட் ஏ .குத்தூஸ் )