பஸ் வண்டி மீது யானை தாக்குதல்!
தனியார் பஸ் வண்டி ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவமொன்று இன்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி மீதே யானை ஒன்று இவ்வாறு தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் பஸ் வண்டியின் முன் பகுதி சேதமடைந்துள்ளன.
சில நாட்களாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று யானைகள் உட்புகுந்து அட்டாகசம் புரிந்து வருகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு உட்புகுந்த யானைகள் பிரதான வீதியை குறுக்கறுத்துச் செல்லும் போது பஸ் வண்டியை தாக்கியுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் உட்புகுந்துள்ள யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் முயற்சிகளை கல்குடா அனர்த்த அவசர சேவைகள் உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)