உள்நாடு

கண்டியில் சமூக நல்லிணக்கத்துக்காக பங்காற்றியவர் ஜெம் லைட் ஏ.எம். இஸ்மாயில் ஹாஜி; பாகிஸ்தான் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் புகழாரம்

கண்டியில் சமூக நல்லிணக்கத்திற்காக ஒரு பெரிய பணியில் ஈடுபட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய பல்லின மக்களிடையே ஒரு மகாத்மாவாகவும் ஒரு சரித்திரபுருஷராகவும் வாழ்ந்தவர்தான் கண்டி ஜெம் லைட் ஏ. எம்.இஸ்மாயில் ஹாஜியார். அவருடைய எண்ணம், செயல், நினைவு ஆகிய சகல அம்சங்களும் ஒரு திருப்பமுனையாகவே இருந்துள்ளன என்று பாக்கிஸ்தான் நாட்டு விதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் தெரிவித்தார்.

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 50 வருட காலமாக கணடியில் சமூகப் பணிபுரிந்த வர்த்தகப் பிரமுகர் மறைந்த கண்டி ஜெம். லைட் ஏ. எம். இஸ்மாயில் ஹாஜியார் நினைவேந்தல் நிகழ்வு கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் எம். சலீம்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதி அபல்சல் மரைக்கார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் உப தலைவர் ஏ. சி. எம். ரஹ்மான், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் உமர்தீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மேலும் சிங்கள், தமிழ். முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் எம். வை. அஹமட் அல் ரஷீட் உள்ளிட்டவர்கள் மற்றும் கண்டி ஜெம் லைட் ஏ. எம்.இஸ்மாயில் ஹாஜியார். அவர்களுடைய குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *