கிரேட் இஸ்ரேல் கனவு முடிவுக்கு வருகிறது; இஸ்ரேல் ஹரெட்ஸ் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்
(கீழ்க்கண்ட கட்டுரை சியோனிச இஸ்ரேலில் இருந்து வெளிவரும் இடதுசாரி லிபரல் இதழான “ஹாரெட்ஸ்” பத்திரிக்கையில் வெளியான தலையங்கத்தின் அடிப்படையில் அமைந்தது. இது ஃபலஸ்தீனியர்களின் எழுச்சியையும், சியோனிச இஸ்ரேலின் இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாட்டின் பலவீனத்தையும் விவரிக்கிறது.)
“தாயகத்தை பாதுகாப்பதில் சிறந்தவர்கள் ஃபலஸ்தீனியர்களே”* என்பது ஹாரெட்ஸ் பத்திரிகையின் தலையங்கமாக இருந்தது.
75 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஒன்றுபட்டு தங்கள் உரிமைகளுக்காக போராடியுள்ளனர் என்றும், அவர்கள் பூமியில் மிகச் சிறந்த சமுதாயம் என்றும் சியோனிச இஸ்ரேலில் வெளிவரும் ஒரு முன்னணி பத்திரிகை ஃபலஸ்தீனியர்களை பற்றி கூறுகிறது.
ஹாரெட்ஸ் பத்திரிகையின் தலையங்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
காஸா போரில், எதிர்ப்பு குழுக்கள் ஒரு ஏவுகணை செலுத்தினாலும், அதற்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் அமைப்புகளால், இஸ்ரேலுக்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 912 மில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. இதில் விமானப் பயன்பாடு, பேட்ரியாட் ஏவுகணைகளின் செலவுகள், வாகன எரிபொருள், ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பயன்பாடு போன்ற செலவுகள் அடங்கும். வணிக நடவடிக்கைகள் முடக்கம், பங்குச் சந்தை சரிவு, பல நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம், விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகத்தில் முழுமையான தேக்கம், பண்ணைகளில் கோடிக்கணக்கான உயிரினங்களின் மரணம், விமான நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகள் முடக்கம், தங்குமிடங்களில் உணவு வழங்குவதற்கான செலவு போன்றவையும் இந்த நஷ்டத்தில் அடங்கும். ஃபலஸ்தீனத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளால் வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் அழிவு செலவுகளும் இதில் அடங்கும்.
இந்த போரை நாமே தொடங்கி வைத்தோம், ஆனால் அதன் கட்டுப்பாடு நம்மிடமிருந்து படிப்படியாக நழுவியது. போரின் முடிவை தீர்மானிப்பதும் நாம் அல்ல. இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன்) உள்ள முஸ்லீம் அரபு நகரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய எதிர்ப்பு புரட்சியில், அவர்கள் நம்மை கடுமையாக தாக்கினர். இதன் காரணமாகவே நம்முடைய தலைமை தயக்கத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது.
அவர்களுடைய ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என்று நாம் நினைத்த நேரங்களிலெல்லாம், அவர்கள் போர்க்களத்தில் சாத்தியமான அனைத்து ஏற்பாடுகளுடனும் வலுவாக அணிவகுத்து நின்றனர். இது நமது அரசாங்கத்திற்கு மோசமான நாட்களின் அறிகுறியை வழங்கியது. இறுதியில், நமது அரசியல்வாதிகள் தங்கள் கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்றும், அவர்களின் கொள்கைகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் உணர்ந்தனர்.
ஃபலஸ்தீனியர்களே இந்த பூமியின் உண்மையான உரிமையாளர்கள். மண்ணின் மைந்தர்களை தவிர, தங்கள் நாட்டிற்காக உடல், பொருள் மற்றும் சந்ததிகளை போர்க்களத்தில் அர்ப்பணிக்க யாரால் முடியும்?
“நான் ஒரு யூதனாக இருந்தும், இஸ்ரேல் நாட்டுடனோ அல்லது இந்த மண்ணுடனோ உண்மையான பற்று கொண்டிருக்கவில்லை. நமது மக்கள் உண்மையில் ஃபலஸ்தீன மண்ணின் பெருமையையும் விசுவாசமும் கொண்டிருந்தால், இந்த போர் தொடங்கியவுடன் அவர்கள் விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் தப்பிச் செல்வதை நாம் கண்டிருக்க மாட்டோம்.”
நாம் ஃபலஸ்தீனியர்களை எல்லா வகையிலும் துன்புறுத்தி வருகிறோம். காரணமின்றி அவர்களைக் கொல்வது, சிறையிலடைப்பது, முற்றுகையிடுவது, போதைக்கு அடிமையாக்குவது, மோசமான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையிலிருந்து அவர்களை விலக்குவது, சுதந்திர சிந்தனைகள், நாத்திகம் போன்றவற்றின் மூலம் இஸ்லாத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவது, ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான பாலியல் செயல்களை பரப்புவதன் மூலம் அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களிலிருந்து அவர்களை விலக்குவது போன்ற முயற்சிகளில் நமது தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அதே நேரத்தில், போதைப்பொருட்களால் வாழ்க்கையை இழந்தவர்கள் கூட தங்கள் நிலத்தையும் அல்-அக்ஸாவையும் பாதுகாக்க எழுந்து நிற்பதையும், அவர்கள் ஒரு அடிப்படையான மறுமலர்ச்சிக்காக போராடும் ஒரு அறிஞரைப் போல மிக வேகமாக மாறும் காட்சியை நாம் கண்டோம்.
அவர்களுக்கு பல வகையான அவமானங்களும், போலீஸ் கைதுகளும் காத்திருக்கின்றன என்று தெரிந்தும், அவர்கள் அல்-அக்ஸா மஸ்ஜிதுக்கு தொழுகைக்கு செல்வதை நிறுத்தவில்லை.
முழு ஆயுதப் படைகளும் செய்யத் துணியாததை, ஃபலஸ்தீனிய எதிர்ப்பு குழுக்கள் சில மாதங்களில் செய்து முடித்தனர். இதன் மூலம், தோல்வியடையாத இஸ்ரேல் இராணுவத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து போர்க்களத்தில் கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் வந்தனர்.
டெல் அவிவ் மீது எதிர்ப்பு குழுக்களின் ஏவுகணைகளை தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கும் போது, “கிரேட் இஸ்ரேல்” என்ற தவறான கனவிலிருந்து விலகுவதே புத்திசாலித்தனம். ஃபலஸ்தீனியர்களுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும். அது நம் அருகில் அமைதியை நிலைநாட்டும் ஒரு நாடாக இருக்கட்டும். அப்போதுதான் இந்த பூமியில் நமது உயிரும் இருப்பும் இன்னும் சில காலம் பாதுகாப்பாக இருக்கும்.
“ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும், அல்லது யூத நாடாக பத்து வருடங்கள் மட்டுமே நாம் தொடர்ந்தாலும், ஒரு நாள் நாம் அவர்களிடம் கணக்கு சொல்ல வேண்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஃபலஸ்தீனியர்கள் மீண்டும் எழுவார்கள், அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் டெல் அவிவை நோக்கி நகர்வார்கள்.”
டாக்டர். ஐஸர் ஃபலஸ்தீன சமூக ஊடக செயற்பாட்டாளர்