வருடாந்த புனித மிஃராஜ் மவ்லித் மஜ்லிஸ்
பேருவளை சீனன்கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை (கட்டுக்குருந்தை) இப்றாஹிமிய்யா ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் புனித மிஃராஜ் மவ்லித் மஜ்லி்ஸ் 27.01.2025 திங்கட்கிழமை மாலை நடைபெறும்.
அஸர் தொழுகையை தொடர்ந்து புருதா ஷரீப் புனித சுப்ஹான மவ்லித். மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யா, ஹரீரி மவ்லித், இஷா தொழுகையை தொடரந்து ஹழரா மஜ்லிஸும், அதையடுத்து, முஸாக்கரா (மார்க்க சொற்பொழிவும்) இடம் பெறும்.
சீனன்கோட்டை ஜாமியதுல் பாஸியா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி பஸ்லான் ஜெஸுல் அஷ்ரபி (பீ.ஏ) விஷேட சொற்பொழிவாற்றுவார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)