மாத்தளையின் மூன்று பள்ளி நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு
மாத்தளை மாவட்ட முஸ்லிம் கலாசார அபிவிருத்தி அதிகாரி எம்.ஜிப்ரியின் வேண்டுதலில் மாத்தளை மாவட்டத்தில் எலமல்பொத்த ஜும்ஆ மஸ்ஜித் உட்பட மூன்று தக்கியாக்கள், நிக்ககொல்ல ரஹீமியா மஸ்ஜித் , உக்குவளை பரகஹவெல ஆயிஷா மஸ்ஜித் ஆகியனவற்றுக்கான தெரிவான நிர்வாகிகளுக்கான நியமனக் கடிதங்களும் கல்லோயா தக்கியாவுக்கான பதிவு சான்றும் மாத்தளை மேலதிக செயலாளர் திருமதி ரிஸ்லாவினால் வழங்கும் நிகழ்வு அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாத்தளை மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் முஹ்தார் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
(உக்குவல நிருபர்)