புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக பூர்வ கலந்துரையாடல்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் ஏ. எச் எம் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் அதிபர் ஐ. ஏ. நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்த
நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் சாகிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி எஸ். ஆர். எம். எம். சரபத்துல்லாவின் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இது வரையில் புத்தளம் சாகிரா தேசியக் கல்லூரியில் இருந்து வெளியேறிய பழைய மாணவர்கள் அமைப்புகளாக உருவாகி செயற்பட்டுவருகின்ற நிலையில், இன்றைய தினம் 40 குழுக்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையினை பாடசாலையின் அதிபர் ஐ. ஏ. நஜீம் அவர்கள் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலையின் கீதமான சாஹிரா தேசிய கல்லூரியில் கற்போம் என்ற கீதத்தை இசைத்தமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
அதனை அடுத்து பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி சாராபதுல்லா தற்போதைய கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தெளிவை வழங்கினார்.
தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் போஷகரும் முன்னாள் புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான இசட்.ஏ. சன்ஹிர் அவர்கள் பழைய மாணவர் சங்கமும் அது அதுபோன்று ஏனைய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பிலான குழுக்களும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலும் இங்கு விளக்கமளித்தார்.
இதனை அடுத்து ஒவ்வொரு குழுக்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முன்வைத்ததோடு பழைய மாணவர் சங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்ச்சிகள் தொடர்பிலும் கருத்துக்களையும் முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை
நிகழ்ச்சிகளை ஆசிரியர் செய்யத் அஹமத் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியமை பாராட்டுக்குரியதாக அமைந்திருந்ததுடன், மரணித்துப் போன பாடசாலையின் பழைய மாணவர்களுக்காக சுய பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இதன் போது அனுஷ்டிக்கப்பட்டது.
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)