உலகம்

கைதாகிய இந்திய மீனவர்களை உடன் மீட்குமாறு நவாஸ் கனி எம்.பீ.ஜெய்சங்கருக்குக் கடிதம்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கே. நவாஸ்கனி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : 

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.

இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர்.

ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர்.

தற்போது 25-01-2025 அன்று இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களையும் 3 மீன்பிடி படகுகளையும், 12-01-2025 அன்று இராமேஸ்வரத்தை சார்ந்த 8 மீனவர்களையும் 2 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *