புதையல் பொருட்களுடன் சந்தேக நபர் கைது.
கிரானேகம உல்பத்தயாய பகுதியில் புதையலுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிரானேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடைய ஹல்மில்லேவ ஆண்டியாகல பகுதியைச் சேர்ந்தவராவர்.
தங்க நிற புத்தர் சிலை 24 இதழ்கள் கொண்ட தங்க தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரானேகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-26-at-21.25.55_17daec3a.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-26-at-21.25.56_34eccf90.jpg)
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)