புத்தளம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் பாடசாலையில் ஆறு பேர் சித்தி
தற்போது வெளியாகியுள்ள தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களான ஜே.ஜெஸா அபா 151 புள்ளிகள், ஏ.ஆயிஷா 151 புள்ளிகள், ஐ. நுபைத் 146 புள்ளிகள், என்.ஆயிஷா 146 புள்ளிகள் , ஆர்.நஹா 144 புள்ளிகள், ஆர்.அப்ரின் 139 புள்ளிகள் என மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீத சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு அச்சாணியாக திகழ்ந்த ஆசிரியர் திருமதி எப்.பீ.எம் டொரீன் மங்களிகா அதிபர் எஸ் எச் எம் அன்சார் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)