வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்ஐதுரூஸ் முஹம்மத் இல்யாஸ்
அனுதாப பிரேரணை உரையில் சஜித் பிரேமதாச.
ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் அவர்கள் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலான பிரதேச மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதி சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றம் ஆணை அவருக்கு கிடைத்தது. அவர் தனது தொழிலால் மருத்துவராக இலவச மருத்துவ சேவைகளை வழங்கினார். கல்வித் துறையைக் கட்டியெழுப்ப பாடுபட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கி பெரும் சேவைகளை ஆற்றினார். அவ்வாறே, ரயில் சேவையை ஆரம்பிக்கவும், விவசாயத்துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார். மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை அமைதியான போராட்டங்களாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார்.
காலஞ்சென்ற ஐதுருஸ் முஹம்மது இல்லயாஸ் அவர்களின் மறைவு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (24) அனுதாபப் பிரேரணை உரையை நிகழ்த்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.