மஹிந்த வசித்த விடுதியைபறித்தமை குற்றம் – SJB
ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது
ராஜபக்ஷ குடும்பம் தவறு செய்திருந்தால் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வந்த வீட்டை பறித்தெடுப்பது தவறான செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றஞ் சாட்டி உள்ளார்.
யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவ தளபதிகளுக்கு காணி வழங்க முடியும் என்றால் ஏன் அதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்க முடியாது? அவரது அரசியல் கொள்கைகளில் எமக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. அவர் பாரதூரமான குற்றங்கள் செய்திருப்பின் அவற்றை விசாரணை செய்யுங்கள். விதமான ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அவர் வசித்து வந்த வீட்டை இவ்வாறு பறித்தெடுப்பது நாகரிகமான செயல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.