புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் (DCC) உறுப்பினராக ரனீஸ் பதூர்தீன்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் அவர்களின் நேரடி பிரதிநிதியாக புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக ரனீஸ் பதூர்தீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அபிவிருத்திகள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் என அனைத்தும் இங்கேதான் கலந்துறையாடப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு குறித்த அபிவிருத்திகள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
எனவே இதன் மூலம் புத்தளத்திற்கான அபிவிருத்திகள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க எமது கட்சியும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் செயலாளர் அவர்களினாலும் இந்த சந்தர்ப்பம் ரனீஸ் பதூர்தீன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு,
எதிர்காலத்தில் எமது மக்களின் குரலாக ஒலிப்பதற்கும், புத்தளத்தில் இன்னும் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், இன்னும் பல முக்கியமான பொருப்புகளும்,பதவிகளும் கட்சியின் மூலம் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவை அனைத்தும் ஒரு கட்சியும்,கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தால் மட்டுமே இது போன்ற விடயங்கள் சாத்தியப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது