உள்நாடு

உலக வங்கி பிரதிநிதிகள் காத்தான்குடிக்கு விஜயம்

உள்ளூர் அபிவிருத்தி ஆதரவு திட்டத்தின் (LDSP) மூலம் காத்தான்குடி நகர எல்லைக்குள் செய்யப்பட்ட அபிவிருத்திகளின் முன்னேற்றத்தினை கண்டறியும் நோக்கில் உலக வங்கி பிரதிநிதிகள் வியாழக்கிழமை (23) காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் சமுகமளித்திருந்த உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட LDSP வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

உலக வங்கியின் LDSP திட்டத்தின் கீழ் 2021 முதல் 2024 வரை கொவிட்19 தடுப்பு நடவடிக்கைகள், குட்வின் சந்தி, டெலிகொம் வீதி, டாக்டர் அகமட் பரீட் மாவத்தை, வாவிக் கரை என்பவற்றில் அமையப் பெற்ற கண்டைனர் வியாபார நிலையங்கள் (Container Business Outlets), றிஸ்வி நகர் வடிகாண், கடற்கரை வீதி பல் சேவை வியாபாரக் கட்டடம் (Multy Service Business Complex), திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பொருத்தப்பட்ட சோலார் மின் உற்பத்தி கலங்ள் ( 40KWat Solar Panels), சோலார் விளக்குகள்,கடற்கரை மற்றும் வாவிக் கரை சிறுவர் பூஙகா (Children Park) அத்துடன் பொது மைதானத்தில் பொருத்தப்படும் ஒளி வெள்ள மின் விளக்குகள் (Floodlights) கொள்வனவு என்பன இதுவரையில் பூரத்தி செய்யபட்டுள்ளமை இஙகு குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *