உள்நாடு

உதயம் ஏற்பாட்டில் ஓட்டமாவடி சிறாஜியாவில் ஊடக செயலமர்வு

ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரியின் 2025 கல்வியாண்டின் கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தரம் 5ம்,6ம் ஷரீஆ மாணவர்களுக்கான குறுங்கால கற்கை நெறியின் அடிப்படையில் ஒருநாள் ஊடக செயலமர்வு கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.

ஒரு நாள் “Journalism” செயலமர்வு “உதயம்” செய்தி பத்திரிகையின் அனுசரணையில் இடம் பெற்ற செயலமர்வில் வளவாளராக ஊடகத் துறையில் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் அஷ்ஷெய்க் எம்.எம். முகைதீன் (இஸ்லாஹி) நடாத்தினார்.

ஊடகத்துறையின் இரு பரிமாணங்கள் இலத்திரனியல் ஊடகம் மற்றும் அச்சு ஊடகம் ஆகியவை குறித்த விரிவான விரிவுரையுடன் மாணவர்கள் எழுத்துத்துறையில் பிரகாசிப்பதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக மேற்படி கற்கைநெறி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இறுதியாக, கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர்களின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் உதயம் செய்தி பத்திரிகையினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் இச்செயலமர்வு குறித்து பின்னூட்டங்களை வழங்கி வைத்தனர்.

இக்கற்கைநெறியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய உதயம் செய்தி பத்திரிகையின் பணிப்பாளர் என்.எம். அமீன் மற்றும் வளவாளராக கலந்து கொண்ட எம்.எம். முகைதீன் இஸ்லாஹி ஆகியோருக்கு கல்லூரி நிருவாகம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *