ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்
ரோஹிங்யா அகதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு விவாதம் இடம் பெற உள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலை தொடர்பாக இந்த விவாதம் நடைபெறுகின்றது.
எதிர்க்கட்சித் தரப்பினரால் இந்த விவாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் 3 மணி முதல் 5 மணி வரை இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார்.