புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பெறுபேறுகளுக்காக இவ்வளவு நேரம் எடுத்தது எங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதற்குக் காரணம், ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியுடன் எழுந்த நீதிமன்ற உத்தரவின் காரணமாக வினாத்தாள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. அதனை நாங்கள் விரைவில் சரிசெய்வோம் எனத் தெரிவித்தார்.