உள்நாடு

திருட்டு, போதைப்பொருள் வியாபாரம்; சம்மாந்துறையில் இருவர் கைது

மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை திருடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு ஆடு, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐஸ் போதைப் பொருளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (22) புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று ஆடுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் போன்றவை விற்பனை செய்ய வருகைதந்த சந்தேக நபர்களை நேற்று (22) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் கடந்த 2025.01.21ம் திகதி மூன்று ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய இன் பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது, சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு பின்பகுதியில் இன்று நண்பகல் வேளை 21 வயதுடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகாமையில் இன்று மாலை வேளையில் 34 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், பெரியநீலாவணை 02 – மருதமுனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் என மொத்தமாக இருவரை சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து திருடிய மூன்று ஆடுகள், திருடிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவரிடம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 2140 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், பெரியநீலாவணை 02 – மருதமுனை பகுதியைச் சேர்ந்தவரிடம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 2650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், பொலிஸ் உத்தியோகத்தர்களான எம். நிரஞ்சன், ஜிஹான், உள்ளிட்ட குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கே.எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *