சகோதரனைக் கொன்றவர் கைது
உடன்பிறந்த சகோதரனை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தை தனது உடன்பிறந்த சகோதரனால் நேற்று (22) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்து விட்டு தலைமறைகிய நபரை வாழைச்சேனை பொலிஸார் இன்று பிறைந்துறைச்சேனைப் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)