திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
அனுராதபுரம் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு முன்பாக (23) வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது.
விமான நிலைய பகுதியை நோக்கி இளைஞர் ஒருவர் பயணித்த எலக்ட்ரிக் சார்ஜிங் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்நதில் அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக்கெண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த தனியார் தீயணைப்பு நிலையத்தை நடத்தும் நபர் ஒருவர் முதலில் தீயை அணைக்க முயன்றதாகவும் பின்னர் அனுராதபுரம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக சரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )