ஜமால்டீன் முஸம்மில் எழுதிய “அப்…பா!” கவிதைகள் நூல் வெளியீடு
கலைஞரும், நடிகரும், எழுத்தாளருமான சிந்தனைப்ரியன் ஜமால்டீன் முஸம்மில் எழுதிய ‘அப்…பா! ‘ கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 26.01.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-10, மருதானை எல்பின்ஸ்டன் சரசவிபாய மண்டபத்தில் நடைபெறும் .
கெப்பிட்டல் தொலைக்காட்சி/வானொலி பணிப்பாளர் திரு.ஸியாஉல் ஹசன் தலைமை தாங்கும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி
அமைச்சர் முனீர் முலப்பர் மௌலவி, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் தொகுதிக்கான அபிவிருத்தி தலைவருமான எம்.ஜே.எம்.பைசால் ஆகியோரும் கெளரவ அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுடமன்ற உறுப்பினர் எஸ.எம்.மரிக்காரும் கலந்து கொள்வர்.
விசேட அதிதிகளாக யூ.எஸ்.குரூப் நிறுவன உரிமையாளர் தேசமான்ய அல்-ஹாஜ் ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர், அம்ஜா டிரவல்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் எச்.எம்.அம்ஜதீன், தினகரன் பிரதம ஆசிரியர் திரு.செந்தில் வேலவர் ஆகியோரா கலந்து கொள்வதுடன் சிறப்பதிதிகளாக ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபர் எம்.ஆர்.குல்சாட் அஹமட், திரைப்பட இயக்குனர் தினேஷ் கனகராஜ், கெபிட்டல் வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாள் திரு.ஜபீர்.முன்னாள் ஜனாதிபதி இணைப்பாளர் சுப்பையா ஆனந்த குமார், வகவம் தலைவர் நஜ்முல் ஹுசைன், முஹப்பத் மீடியா உரிமையாளர் அல-ஹாஜ் நிஸாம். புரவலர் ஜே.பி.ஜெயராம் (சமாதான நீதிவான்), புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தா, பு.அ.வட்ட தலைவர் ஷண்மு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
நூல் ஆய்வுரையை சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸும் நயவுரையை அல்-ஹிக்மா கல்லூரியின் முன்னாள் அதிபர் முல்லை முஷ்ரிபாவும், வாழ்த்துக் கவிதைகளை சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி, ஈழகணேஷ், கிண்ணியா அமீர் அலி, வாழைத்தோட்டம் வசீர் ஆகியோரும் வழங்கவுள்ளார்கள்.