கைவண்ணம் பெண்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம்
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் ஏற்பாட்டில் “கைவண்ணம்” என்ற பெயரில் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை நிலையம் புத்தளத்தில் வெள்ளிக்கிழமை (24) காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
எம்.டப்யூ.டி.டீ (MWDT) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா முஹைதீன் தலைமையில் இடம்பெறும் இத் திறப்பு விழாவில் புத்தளத்தின் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன். பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் மேற்கொண்ட டெப் (DAP) வேலைத்திட்டத்தின் ஊடாக சுயதொழில் பயிற்சியின் மூலம் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை நிலையமாக இது காணப்படும்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)