பேருவளை ஜெம் பியுரோவின் 50 வருட பூர்த்தியும், புதிய கிளை திறப்பும்
இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனையில் புகழ்பெற்ற பேருவளை ஜெம் பியுரோவின் 50 வருட பூர்த்தி நிகழ்வும், மூன்றாவது கிளை விற்பனை நிலைய திறப்பு விழாவும் 18 ஆம் திகதி (2025-01-18) நடைபெற்றது.
பேருவளை ஜெம் பியுரோவின் புதிய காட்சியறை இலக்கம் 42/1, வெலிப்பன்னை வீதி, அளுத்கமையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
ஜெம் பியுரோ அதிபதியும், பேருவளை நகர சபை முன்னாள் தலைவருமான அல்-ஹாஜ் எம். மஸாஹிம் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் அல்-ஹாஜ் முஹம்மத் பயாஸ் ஜே.பி உட்பட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
உல்லாச பயணபுரியாக திகழும் பெந்தொட்டை மற்றும் அளுத்கமையை மையமாகக் கொண்டு பேருவளை ஜெம் பியுரோ கிளை அளுத்கம நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கிளை மருதானையிலும், இரண்டாவது கிளை அஹுன்கல்லையிலும் ஆரம்பிக்கப்பட்டதுடன் புதிய மூன்றாவது கிளை விலை மதிப்புள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை கொண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உல்லாசப் பயணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
50 வருட காலமாக மிகவும் நம்பிக்கையுடன் பேருவளை ஜெம் பியுரோ வெற்றிகரமாக இயங்குவதாக அதன் அதிபதி மஸாஹிம் முஹம்மத் தெரிவித்தார்.
ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் உல்லாசப் பயணிகளுக்கு மற்றும் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உல்லாசப் பயணிகள் தொடர்ந்தும் இந்த இடத்தை நாடி வருவது நம்பிக்கையின் வெளிப்பாடே எனவும் அவர் கூறினார்.
அளுத்கமையில் திறக்கப்பட்டுள்ள புதிய கிளை இரத்தினக்கல், தங்க ஆபரண நூதனசாலையும் உள்ளடக்கியதாகும்.
(பேருவளை பீ.எம் முக்தார்)